வேலூர்: சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பிச்சாண்டி. இவர் ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) தனது சித்தப்பா, சித்தி ஆகிய இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு, குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் மாலை வீடு திரும்பிய போது, 30 சவரன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கம் லாக்கருடன் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். . இதனையடுத்து பிச்சாண்டி அளித்த புகாரின் பேரில், சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் ஆள் இருந்தபோதே கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளதால், நன்கு தெரிந்த யாரேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிசி காட்சிகளும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முதலிரவு மொட்டை மாடியிலா... புதுமாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி