வேலூர் மாவட்டம் அணைகட்டுப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் 10 பேர் உள்பட 22 பேர், கர்நாடகா மாநிலம் அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டுதல், செங்கல் சூலை உள்ளிட்ட தொழில்களில் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அசான் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் 22 கொத்தடிமைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இடைதரகர் மூலம் ரூ. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை முன்பணம் பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட 22 பேரும் இன்று (நவம்பர் 20) வேலூர் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்ததால் கரோனா பரிசோதனையும், பொது மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள உதவி ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார். அதன் பேரில் சத்துவாச்சாரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 23 பேரும் 2 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்யப்பட்ட பின், அவரவர் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.