ETV Bharat / state

வீட்டில் புகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி 2 சவரன் நகை கொள்ளை! - வழிபறி

வேலூர்: ஆம்பூர் அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு சவரன் நகை கொள்ளையடித்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

house
author img

By

Published : Jun 21, 2019, 10:24 AM IST

ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டி கே. தெருவைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவரது மனைவி சபானா. இவர், இன்று மதியம் வீட்டிலிருந்தபோது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சபானா அணிந்திருந்த இரண்டு சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர்.

உடனடியாக சத்தம் போட்ட சபானாவை ஷோபாவில் தள்ளிவிட்டு அந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவம் இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டதில், சாதிக் பாஷாவின் வீட்டின் அருகிலிருந்த பைரோஸ் என்பவர் சில மாதங்களுக்கு முன் மும்பை சென்று ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் என்பதும், ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பிய பைரோஸ் திரும்பி மும்பை செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், பைரோஸை தேடிவந்த நபர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

வீட்டில் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி 2 சவரன் நகை கொள்ளை

பைரோஸிற்கும் அந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்திருக்கக்கலாம் எனவும், அவரைத் தேடிவந்த நபர்கள் வீடு தெரியாமல் சாதிக்கின் வீட்டில் நுழைந்து அவரது மனைவியை மிரட்டி நகையைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி கொள்ளை சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro: ஆம்பூர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை கொள்ளை காவல்துறையினர் விசாரணை.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியாம்பட் TK தெருவைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா இவரது மனைவி சபானா.

இவர் இன்று மதியம் வீட்டில் இருந்தபோது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சபானா அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர்.

உடனடியாக சத்தம் போட்ட சபானாவை சோபாவில் தள்ளிவிட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்

சாதிக் பாஷாவின் வீட்டின் அருகில் இருந்த பைரோஸ் என்பவர் சில மாதங்களுக்கு முன் மும்பை சென்று ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பிய பைரோஸ் திரும்பி மும்பை செல்லவில்லை ஒரு வேளை பைரோஸை தேடி வந்த நபர்களாக இருக்ககூடும் என அக்கம்பக கத்தினர் தெரிவித்தனர்.

Conclusion: மேலும் சாதிக் பாஷாவின் வீட்டின் அருகில் வசித்து வரும் பைரோஸிற்கும் அங்கு வந்த நபர்களுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்திருக்க கூடும் எனவே அவரை தேடி அங்கு வந்த நபர்கள் வீடு தெரியாமல் சாதிக்கின் வீட்டில் நுழைந்து அவரது மனைவியை மிரட்டி நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர் பைரோஸின் பிரச்சனைக்காக வந்தவர்களா அல்லது வந்த மர்ம நபர்கள் திருடர்களா என்ற பல்வேறு கோணத்தில் உமராபாத் காவல்துறை மற்றும் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டபகலில் நடந்தேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.