ETV Bharat / state

தங்கையை பாலியல் வல்லுறவு செய்த அண்ணண்கள் - போக்சோ சட்டத்தில் கைது! - 17 வயது பெண் பாலியல் பலாத்கரம்

வேலூர்: பொன்னை அருகே தங்கையை பாலியல் வல்லுறவு செய்த அண்ணன்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

sexual harassment
author img

By

Published : Oct 13, 2019, 7:05 PM IST

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே உள்ள வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (17) எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் செப். 28ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனது தோழி தீபிகாவின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, சென்னையிலிருந்து ஆற்காடு பேருந்து நிலையம் வந்திறங்கினார்.

அப்போது இரவு நேரம் என்பதால் ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாத நிலையில், தனது பெரியப்பா மகன் குபேந்திரன்(21) என்பவருக்கு ஃபோன் செய்து ஆற்காடு பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி அழைத்துள்ளார். இவரது அழைப்பை ஏற்று ஆற்காடு பஸ் நிலையத்திற்கு வந்த குபேந்திரன், இருசக்கர வாகனத்தில் உஷாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், பள்ளேரி வழியாக யாரும் இல்லாத அந்த இரவு நேரத்தில், குபேந்திரனின் சகோதர உறவுமுறையான அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) அரியை(18) குபேந்திரன் ஃபோன் செய்து அழைத்துள்ளார். அந்த இளைஞர் வருவதைக் கண்டதும் நிஷா மூன்றாவது நபர் ஒருவர் வந்திருப்பது தொடர்பாக குபேந்திரனிடம் கேட்டுள்ளார்.

அப்போது குபேந்திரன் நிஷாவின் கன்னத்தில் அறைந்து,’ அப்பு என்ன சொல்கிறானோ, அதை செய்’ எனக் கூறியுள்ளார். இதற்கு நிஷா மறுப்புத் தெரிவிக்கவே, நிஷாவின் கைகளை பின்புறமாக குபேந்திரன் கட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பு, குபேந்திரன் ஆகிய இருவரும் நிஷாவை பாலியல் வல்லுறவு செய்து, இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன நிஷா இதுகுறித்து வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் குபேந்திரன், அப்பு ஆகிய இருவரும் நிஷாவிற்கு மீண்டும் ஃபோன் செய்து, ’உன்னை பாலியல் வல்லுறவு செய்த வீடியோ தங்களிடம் இருக்கிறது. இதனால், மீண்டும் தங்களது பாலியல் இச்சைக்கு சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் வீடியோவை வெளியிடப்போவதாக’ தெரிவித்துள்ளனர்.

பயந்து போன நிஷா நடந்த சம்பவத்தை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிஷாவின் பெற்றோர்கள் இதுதொடர்பாக பொன்னை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த பொன்னை காவல்துறையினர் குபேந்திரன், அப்பு ஆகியோரை போக்‌சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும், தங்கையை அண்ணன் உறவு முறையினரே பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலூர் மாவட்டத்தில் 8 நாட்களில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

Intro:வேலூர் மாவட்டம்

பொன்னை அருகே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த காம வெறி பிடித்த அண்ணன்கள் - சட்டத்தில் கைது செய்து காவல்துறை நடவடிக்கைBody:வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே பொன்னை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (17) எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி உஷா சென்னையில் உள்ள தனது தோழி தீபிகாவின் பிறந்த நாளுக்கு சென்றுவிட்டு வந்துள்ளார். அப்போது ஆற்காடு பஸ் நிலையம் வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் ஊருக்கு செல்வதற்கு பஸ் இல்லாததால் அவரது பெரியப்பா ஆனந்தனின் மகன் குபேந்திரன்( 21) என்பவருக்கு போன் செய்து வரவைத்துள்ளார். ஆற்காடு பஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற குபேந்திரன் லாலாபேட்டை பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றுள்ளார். இருவரும் வசூர் பகுதிக்கு செல்லும்போது பள்ளேரி என்ற பகுதியில் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நிஷாவிடம் குபேந்திரன் தெரிவித்துள்ளார் இதையடுத்து சாலையோரம் நிலத்தின் அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர் அப்போது குபேந்திரனின் சகோதர உறவுமுறையான அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு (எ) அரியை( 18) குபேந்திரன் போன் செய்து அழைத்துள்ளார். இது தெரியாத நிஷா தன் அண்ணனிடம் திடீரென மூன்றாவது நபர் ஒருவர் வந்திருப்பது தொடர்பாக கூறியிருக்கிறார் அப்பொழுது குபேந்திரன் நிஷாவை கண்ணத்தில் தாக்கி அப்பு என்ன சொல்கிறானோ அதை செய் எனக் கூறியுள்ளார் இதற்கு நிஷா மறுப்பு தெரிவிக்கவே நிஷாவின் கைகளை பின்புறமாக கட்டி உள்ளார் குபேந்திரன் . இதனையடுத்து அப்பு மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரும் நிஷாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு இருக்கிறார்கள். பயந்துபோன நிஷா இதைப்பற்றி யாரிடமும் கூறவில்லை .இந்த நிலையில் இருவரும் மீண்டும் போன் செய்து உன்னை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ எங்களிடம் உள்ளது. எனவே மீண்டும் தங்களது பாலியல் இச்சைக்கு சம்மதிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளனர். அவ்வாறு ஒப்புகொள்ளாவிட்டால் வீடியோவை வெளியிடபோவதாக மிரட்டியாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பயந்து போன நிஷா நடந்த சம்பவத்தை உறவுக்காரர்களிடம் சொல்லி அழுதுள்ளார் இது சம்பந்தமாக பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த பொன்னை போலீசார் குபேந்திரன் அரி ஆகியோரை போக்‌சோ சட்டத்தில் கைது செயதனர். தங்கையை அண்ணன் உறவு முறையினரே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.