வேலூர் பலவன்சாத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். மாற்றுத்திறனாளியான இவர் காய்கறிக் கடை நடத்திவந்தார். இந்த நிலையில் இவர் கடந்த மே 13ஆம் தேதி கரோனா அறிகுறியுடன் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது 13 வயது மகன் யஸ்வந்த் குடும்ப வறுமை காரணமாக தனது தந்தை நடத்திவந்த கடையை நடத்திவருகிறார்.
இதனை அறிந்த வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை குழுத் தலைவரான எஸ்.ஆர்.கே. அப்பு காய்கறிக் கடை நடத்திவரும் சிறுவன் யஸ்வந்திற்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மேலும் அவரது தாய்க்கான கைம்பெண் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை