வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில், அப்பகுதியில் சோதனை நடத்துமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ரேசன் அரிசி பறிமுதல்
அதனடிப்படையில், பறக்கும்படை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் நேற்று (ஜன. 06) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேர்ணாம்பட்டு வட்டம் ஓங்கு குப்பம் ரோடு இரண்டாவது தெருவில் வசிக்கும் ஏசன் பாய் என்கிறவர் வீட்டிலிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, குடியாத்தத்தில் உள்ள அரசு தானியக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரிடம் உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!