திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அபிகிரிப்பட்டரை மலைகிராமத்தில் நேற்று இரவு, சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, அக்கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பை பொதுமக்கள், வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவா்கள் அருகேயுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாம்பைக் கொண்டு சென்றுவிட்டனர்.
இங்கு சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் தொடர்ந்து மலைப்பாம்புகள் ஊருக்குள் வருவதால், மக்கள் கல்நடைகளை நினைத்து அச்சப்படுகின்றனர். எனவே அடிக்கடி ஊருக்குள் மலைப்பாம்புகள் புகாதவண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கைக்குழந்தையின் முன் தாய் தூக்கு மாட்டி தற்கொலை