சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் மடிக்கணினியுடன் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இதற்கு அலுவலர், "வாக்கு இந்திரங்களை 'ஹேக்' செய்ய முடியாது. வேண்டுமென்றால் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கிறது. 'ஹேக்கர்ஸ்' இருந்தால் அழைத்து வந்து செயல்படுத்திக் காட்டலாம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறுகையில், "வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிக்கடி சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடக்கின்றன.
ஏற்கனவே சந்தேகப்படும்படி வாகனம் வந்தது. 'ட்ரோன்' ஒன்று பறந்தது. தற்போது, மடிக்கணினியுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இந்த மையத்தில் மட்டும் அடிக்கடி இதுபோல் நடக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் வெளிநபர்கள் நடமாட்டம்: திமுகவினர் புகார்