ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

திருச்சி: மது போதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
author img

By

Published : Nov 15, 2020, 11:03 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருமலையான்பட்டியை சேர்ந்த கோபிநாத் (18), மது போதையில் நேற்றிரவு (நவ.15) தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

சூளியாப்பட்டி பகுதியில் உள்ள இந்த தனியார் செல்போன் கோபுரத்தில் சுமார் 40 அடி தூரம் வரை ஏறிய கோபிநாத் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டும், அவரை அழைத்து வரச்சொல்லியும் கூச்சலிட்டார். இதைக் கண்ட அப்பகுதியினர் மணப்பாறை தீயணைப்பு துறை, காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இளைஞரை கீழே அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மித மிஞ்சிய போதையில் கோபுரத்தின் கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த இளைஞரை, தீயணைப்பு வீரர்கள் திறம்பட செயல்பட்டு மீட்டனர்.

பின்னர் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு பெண்ணின் பெயரை மட்டுமே திருப்பி திருப்பி குறிப்பிட்டு அவரை அழைத்து வரும்படி தெரிவித்தார். சுயநினைவின்றி போதையிலிருந்த இளைஞரை அவரது குடும்பத்தினருடன் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். போதையில் இருந்த இளைஞரை விரைந்து உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: துரிதமாகச் செயல்பட்டு மீட்ட காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.