திருச்சி மாவட்டம் மருதாண்ட குறிச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 26). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராமமூர்த்தி கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராமமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதற்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ தனி சிறப்பு வார்டில் ராமமூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் இதே போன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்டிருந்தது சாதாரண காய்ச்சல்தான் என்பது பின்னர் தெரியவந்தது.
இதையும் படிங்க: ஈரோடு, வேடன்நகர் கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்!