ETV Bharat / state

ஆகஸ்ட் 15 முதல் யோகா பயிற்சி: யோகாசன பயிற்றுநர் டிஆர்ஜி கவுதமன் தகவல்

திருச்சி: யோகா வகுப்புகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என யோகாசன பயிற்றுநர் டிஆர்ஜி கவுதமன் தெரிவித்துள்ளார்

டிஆர்ஜி கவுதமன் தகவல்
டிஆர்ஜி கவுதமன் தகவல்
author img

By

Published : Aug 2, 2020, 4:26 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக யோகா உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யோகா பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

யோகா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பிராணயாமாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிராணயாம யோகா அல்லது சுவாசப் பயிற்சிகள் நமது சுவாச மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது உடலின் சுவாச அமைப்பு என்பதால், இது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது என பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தன்று கூறினார்.

அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த யோகசன பயிற்றுனர் டிஆர்ஜி கவுதமனிடம் நூற்றுக்கணக்கானோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக இவர் பயிற்சி அளிப்பதை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், தகுந்த இடைவெளியுடன் யோகா வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

யோகாசன பயிற்றுனர் டிஆர்ஜி கவுதமன் பேசிய காணொலி

தங்கம் சுருளி சுவாமிகளின் பிரதான சீடராக விளங்கும் டிஆர்ஜி கவுதமன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினருக்கும் எளிமையான யோகா பயிற்சிகளை அளித்து வருகிறார். திருச்சி பாலக்கரை, தில்லைநகர், சுந்தர் நகர், அய்யப்பன் கோயில், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார். இவரது எளிமையான யோகா பயிற்சியின் மூலம் பலர் மருத்துவ சிகிச்சை இன்றி இயற்கையான முறையில் குணமடைந்துள்ளனர். அதனால் கரோனா காலத்தில் இவரது பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவதால் அவரது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.