ETV Bharat / state

சர்வதேச குத்துச்சண்டை போட்டி - தங்கம் வென்ற திருச்சி இளைஞருக்கு உற்சாக வரவேற்பு!

திருச்சி : துபாயில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் துவாக்குடியைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தங்கம் வென்றுள்ளார்.

world boxing champion aravind
உலக குத்துச்சண்டை போட்டியில் வென்ற அரவிந்த் பிரகாஷ்
author img

By

Published : Feb 18, 2020, 3:42 PM IST

கடந்த மாதம், துபாயில் உலக குத்துச் சண்டை போட்டி தொடங்கியது. இதில், உலகளவில் துபாய், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியா சார்பில், 18 பேர் கலந்து கொண்டனர்.

தங்கப்பதக்கம் பெற்று நாடு திரும்பிய அரவிந்த் பிரகாஷ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் அவரது உறவினர்கள்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் பிரகாஷ் என்பவர் 91 கிலோவுக்கும் மேற்பட்ட எடைப் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர், நாடு திரும்பிய அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வெற்றி குறித்து அரவிந்த் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக, 8 ஆண்டுகள் பயிற்சி எடுத்ததாகவும், உலகளவில் நடந்த குத்துச் சண்டை போட்டிகளில் 3 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை பெற்றுள்ளேன்' என்றார்.

அரவிந்த் பிரகாஷ் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.