ETV Bharat / state

கணவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் எடுத்துச் சென்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

திருச்சியில் மதுவுக்கு அடிமையான கணவனை, மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு, சலடத்தை சாக்கு மூட்டையில் கட்டி அப்புறப்படுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Wife
திருச்சி
author img

By

Published : Jul 2, 2023, 5:03 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி பகுதியைச் சேர்ந்தவர், சிவலிங்கம்(40). இவரது மனைவி தனலட்சுமி(36). வெங்காய வியாபாரியான சிவலிங்கத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல், நேற்று(ஜூலை 1) காலையும் சிவலிங்கத்திற்கும் மனைவி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தனலட்சுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனலட்சுமி உறவினர்களான செந்தில்குமார், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுமதி உள்ளிட்டோர் சிவலிங்கத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் சிவலிங்கத்திற்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தனலட்சுமி தனது உறவினர்களோடு சேர்ந்து இரும்புக் கம்பியால் சிவலிங்கத்தைத் தாக்கியுள்ளார். அதில், சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர்கள், சிவலிங்கத்தின் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி, சிவலிங்கத்தின் உடலைச் சாக்கு முட்டையில் கட்டி காரில் ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை 4 மணியளவில் நாவலூர் குட்டப்பட்டு பகுதிக்குச் சென்றுள்ளனர். உடலைப் பாலத்துக்கு அடியில் வீசுவதற்காகக் காரை நிறுத்தி உள்ளனர். அதேநேரம் அப்பகுதியில், ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விஜயகுமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வெகு நேரமாக கார் நிற்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த காவலர் விஜயகுமார், இருசக்கர வாகனத்தில் காரை நோக்கி சென்றுள்ளார். காவலர் வருவதைக் கண்ட செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார். தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோர் அங்கேயே நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்து காரை சோதனை செய்தார். அதில், சிவலிங்கத்தின் உடல் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார், உடனே ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிவலிங்கத்தின் உடல், கார் மற்றும் தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரையும் அவர்களது பகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய செந்தில்குமாரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் மனைவியை கழுத்து நெரித்துக்கொலை செய்த கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.