ETV Bharat / state

திருச்சியில் காய்கறி விற்பனை செய்யப்படும் - சில்லறை வியாபாரிகள்! - Trichy Gandhi Market

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து காய்கறி விற்பனை செய்யப்படும் என்று திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

சில்லரை வியாபாரிகள்
சில்லரை வியாபாரிகள்
author img

By

Published : Nov 23, 2020, 1:50 PM IST

திருச்சியின் பிரதான சந்தையான காந்தி மார்க்கெட் மணிகண்டம் அருகே புதிதாக கட்டப்பட்ட காய்கனி வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அங்கு மொத்த விற்பனையாளர்களுக்கு என்று கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில்லறை வியாபாரம் தொடர்ந்து காந்தி சந்தையிலேயே நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.

இது தொடர்பாக நீதிமன்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடந்ததோடு, கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட காந்தி சந்தையை திறக்க தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதுபோல திருச்சி மாநகரில் தற்காலிகமாக செயல்படும் அனைத்தும் தொடர்ந்து செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் காந்தி சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நாளை (24ஆம்) முதல் காய்கறி விற்பனை நடைபெறாது என்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகும்.

மேலும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்பட்ட சில்லரை வியாபாரிகள் தற்போது இ.பி. ரோடு மதுரம் மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம், எஸ்ஐடி கல்லூரி வளாகம், ஜோசப் கல்லூரி வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த சில்லறை வியாபாரிகளின் ஆலோசனை கூட்டமானது இன்று (23ஆம்) மதுரம் மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது சில்லறை வியாபாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அதனால் நாளை முதல் வழக்கம் போல் சில்லரை காய்கறி விற்பனை நடைபெறும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சபரிமலை சீசன் வரை கடை நடத்த அனுமதிகோரி சாலையோர வியாபாரிகள் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.