ETV Bharat / state

பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் - திருமா எச்சரிக்கை - திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமா

திருச்சி: பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan
author img

By

Published : Feb 22, 2020, 3:35 PM IST

திருச்சியில் இன்று தேசம் காப்போம் பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.

26 ஆயிரத்து 658 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள். இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகிவிடும். இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்கள், பட்டியலின மக்கள் மட்டும்தான் பாத்திப்புக்குள்ளாவார்கள் என்று கருதினால் அது அறியாமை.

அவ்வாறு நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை. என்.ஆர்.சி. குறித்து பிரதமரும், உள் துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறி நாடகமாடுகின்றனர். பொருளாதார வீழ்ச்சியைச் சரிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்து அதைச் சிதைப்பது சங்பரிவார்களின் நீண்ட நாள் கனவாகும்.

கூட்டணி தர்மம் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார். பாஜக செய்யும் பாவச்செயல்களுக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் துணை போகின்றன. பாஜகவின் பாவத்திற்கு அதிமுக பலியாக வேண்டாம்" என எச்சரித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மேலும், பட்டியலின சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ். பாரதியின் பேச்சு வருத்தமும், அதிர்ச்சியுமளிக்கிறது. அவர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் அது குறித்து பேசத் தேவையில்லை என்றார்.

இதையும் படிங்க: கடலூர், நாகையில் பெட்ரோலியத் திட்டங்கள் ரத்து - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.