தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாசசாரம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உள்ளது. அதுபோல தமிழ்மொழிக்கும் சிறப்புகள் உள்ளன. எந்த ஒரு மொழியையும் விருப்பத்திற்கு எதிராக திணிக்கவும், கட்டாயப்படுத்தவும் முடியாது.
அப்படி மொழி விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டால் மக்களும் ஏற்க மாட்டார்கள். முதல் மொழியாக தாய்மொழியும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என எதுவானாலும் அரசியல் நிகழ்ச்சிக்கோ அல்லது தனியார் நிகழ்ச்சிக்கோ வைக்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அரசு அனுமதி வழங்கும் இடங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி அங்கு 100 விழுக்காடு பாதுகாப்புடன் இவற்றை வைக்கலாம். பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது. 100 விழுக்காடு பேனர் கலாசசரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தால் அதையும் ஏற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: