திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த பெருவிழாவில் ஒன்றான பகல் பத்து வைபவத்தின் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.
பகல்பத்து நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான இன்று (டிச. 17) காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டார். முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம் , நெற்றியில் கலிங்க தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்ட பட்சி, ரத்தின பாதம் அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை வழங்குகிறார்.
மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகல்பத்து 2ஆம் நாள்: முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளிய ஸ்ரீரங்க நம்பெருமாள்