ETV Bharat / state

மதுவால் நேர்ந்த சோகம்: ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 28, 2020, 11:24 AM IST

திருச்சி: மதுபோதையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Two youths were dead in manapaarai  Two youths were dead when they tried to cross the railway track  Liquor Deaths  Trichy Latest News  திருச்சி தற்போதைய செய்திகள்  ரயில் பாதையை கடக்க முயன்ற இருவர் பலி  ரயில் பாதை  மதுபோதை உயிரிழப்புகள்  2 youths killed in train collision
2 youths killed in train collision

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் தண்டவாளத்தில் இரண்டு ஆண் சடலங்கள் உடல் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர், இறந்து கிடந்த உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுபோதையால் நிகழ்ந்த சோகம்

பின்னர், இதுதொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பூமாலைபட்டியைச் சேர்ந்த ஜேம்ஸ் (20), அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (18) என்பதும், இருவரும் நேற்றிரவு(டிச.27) மதுபோதையில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என, அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் விரிசல்: ஓட்டுநரால் உயிர் தப்பிய பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.