திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள ஊனையூரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடையின் மேற்பார்வையாளர் பெருமாள் (47), விற்பனையாளர் ஆறுமுகம் (39) ஆகியோர் கடையை பூட்டி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் பெருமாள், ஆறுமுகத்தை அரிவாளை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வளநாடு காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.