ETV Bharat / state

குளத்தில் குளிக்கச் சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

author img

By

Published : May 15, 2020, 10:07 PM IST

திருச்சி: மணப்பாறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இரட்டை சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

twin-sisters-drowned-in-pool
twin-sisters-drowned-in-pool

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவருக்கு ராமபிரியா (9), லெட்சுமிபிரியா (9) என்ற இரட்டை குழந்தைகள் உண்டு. இவர்கள் இருவரும் இன்று மாலை வீட்டிற்கு அருகேயுள்ள கும்மடிக் குளம் பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் கால் இடறி குளத்தில் உள்ள ஆழமான பகுதியில் தவறி விழுந்து தத்தளித்துள்ளனர். அதைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து சிறுமிகள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமிகள் இருவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வளநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 17 வயது சிறுவன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.