திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு அக்பர் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன.
இந்நிலையில் இந்தப் பகுதியில் கஞ்சா செடி விளைந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி தில்லை நகர் காவல்துறையினர் சென்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கஞ்சா செடி வளர்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை அழிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
மேலும், கஞ்சா செடி தானாக வளர்ந்ததா அல்லது சமூக விரோதிகள் திட்டமிட்டு பயிரிட்டு வளர்த்தனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: