திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணின் உடலைப் பார்த்த, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த விராலிமலை காவல் துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே திருச்சி அருகே இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: பெண் டாக்டர் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை - முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்!