திருச்சி காந்தி மார்க்கெட், தாராநல்லூர், விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகள் புனிதவதி (31), எம்.டி படித்துவிட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த புனிதவதி விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த புனிதவதியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புனிதவதியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... திருமணமாகி 11 நாட்கள் - இளம்பெண் தற்கொலை