ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம் - trichy latest tamil news

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அழுகிய காய்கறிகளை கீழே கொட்டி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

vegetables merchant protest at trichy collector office
Trichy vegetables merchant protest
author img

By

Published : Feb 25, 2020, 12:27 PM IST

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் மூன்று காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. இந்நிலையில் தெப்பக்குளம், கீதாபுரம் பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு சந்தைகள் கடந்த 15 வாரமாக செயல்பட்டு வருகின்றது.

இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீரங்கம் மார்க்கெட் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அழுகிய காய்கறிகள், பழங்களை தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் மார்க்கெட் வியாபாரி அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள வார சந்தையினால் தினமும் மார்க்கெட்டில் எங்களது காய்கறிகள் பழங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து நஷ்டத்துக்கு ஆளாகின்றோம்.

ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மார்க்கெட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் ரூ. 13 லட்சம் வரி கட்டப்பட்டு வரும் நிலையில், இது போன்ற தனிநபர் சந்தை ஏற்பாட்டினால் எங்களுக்கு பெரும் தொழில் நஷ்டம் ஏற்படுகின்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாரச்சந்தை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.