திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் நம்பெருமான் உத்திர வீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (ஜன. 27) காலை கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தைத் தேரில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி, உத்தர வீதிகளில் நம்பெருமாள் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கூடி ரங்கா ரங்கா என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரோனா கட்டுப்பாடு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷங்கள் அனைத்தும் கோயில் வளாகத்திற்குள்ளேயே இத்தனை நாட்கள் நடந்து வந்தது. தற்போது ஊரடங்கு, கரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் முதன்முறையாக கோயில் வளாகத்திற்கு வெளியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் நம்பெருமாள் தை தேரோட்ட விழாவில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதையும் படிங்க...இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்