திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். பின்னர் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் கிறிஸ்டி என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பலமுறை வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களைப் புறக்கணிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: 'பட்டா வழங்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்!'