தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 4,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இன்று (ஜூலை 20) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் சிகிச்சைக்கு பின்னர், தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 978 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று (ஜூலை 20) 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கரோனாவிற்கு 1,046 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சிறப்புப் பேட்டி!