திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திரவியராஜ் (55).
இவர் துவாக்குடி அருகே உள்ள அசூருக்கு நேற்று இரவு மொபட்டில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
அப்போது ,அசூர் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது தஞ்சையில் இருந்து திருச்சி துவாக்குடி நோக்கி வந்த வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மொபட்டில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சை மாவட்டம் நவலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த எட்வின் (23), வாழவந்தான் கோட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (28), திரவியராஜ் ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துவாக்குடி காவல்துறையினர் மூன்று பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!