மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே பணிமனைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வீரசேகரன், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் பிபேக் தேப்ராய் கமிட்டி அமைத்து ரயில்வேயைப் பிரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. தொடர்ந்து பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்து நடவடிக்கை எடுத்தது. ரயில்வேயில் 7 லட்சம் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸின் கொள்கை தனியாக உள்ளது: அமைச்சர் தங்கமணி
100 நாள் கனவுத் திட்டம் என்ற பெயரில் 150 பயணிகள் ரயில்களையும், 600 ரயில் நிலையங்களையும், 7 உற்பத்தி பணிமனைகளையும் தனியாருக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஒரு ஆண்டில் முதல் கட்டமாக 10 விழுக்காடு ஆட்குறைப்பு செய்யவும், மூன்று ஆண்டுகளில் 30 விழுக்காடு ஆட்குறைப்பு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.