திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் திடீரென தீ பிடித்து கரும்புகையாக வானில் காட்சியளித்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து பற்றி எரிந்த தீயை சுமார் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர்.
சாலையோரத்தில் இருந்த காய்ந்த புற்களின் மீது பற்றிய தீயானது, கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் இருந்த துளைகளில் இருந்த காய்ந்த புற்களின் வழியாக தீயானது கல்லூரி வளாகத்திற்குள்ளே சென்று மளமளவென பற்றி எரிந்ததுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!