திருச்சி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்ரீரங்கம் தொகுதி அல்லித்துறையில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடினர். குறிப்பாக தங்கள் இல்லம் முன்பு வண்ண கோலங்கள் இட்டு புத்தாடைகள் அணிந்து மண் பானை பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பொங்கல் பொங்கி வரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொங்கலோ பொங்கல் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சூரிய பகவானை வழிபட்டனர். சமீபகாலமாக தமிழ்நாடு என்ற சொல் அரசியலாக்கபட்டு வந்த நிலையில் வண்ண கோலங்களில் #தமிழ்நாடு என வண்ண கோலங்களால் வரைந்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க: "தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு