ETV Bharat / state

திருச்சி ஜல்லிக்கட்டு - துள்ளி வரும் காளைகளை அடக்க முயற்சிக்கும் வீரர்கள்! - பள்ளப்பட்டி ஜல்லிகட்டு

திருச்சி பள்ளப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

திருச்சி ஜல்லிக்கட்டு
திருச்சி ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 22, 2022, 12:59 PM IST

திருச்சி : ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதனை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

துள்ளி வரும் காளைகளை அடக்கும் வீரர்கள்

சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்றும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில்,அண்டா, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஏராளமான போட்டியாளர்கள் ஆர்வமுடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் நான்காவது ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : திரெளபதி அம்மன் கோயிலில் எருது விடும் விழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.