ETV Bharat / state

'தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது' - தமிமுன் அன்சாரி - Trichy Half Shirt Budget

திருச்சி: தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளதாக தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.

தமிமுன் அன்சாரி பேட்டி
தமிமுன் அன்சாரி பேட்டி
author img

By

Published : Feb 15, 2020, 5:54 PM IST

திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்துவருகிறது. அதனால் பாஜக அரசு பிடிவாதம் பிடிக்காமல் அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். போராட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் இணைந்து போராடுவது ஆறுதல் அளிக்கிறது.

தமிமுன் அன்சாரி பேட்டி

கேரளா, புதுவை, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதேபோல, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'அமைச்சர் இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' - தமிமுன் அன்சாரி

Intro:தமிழக பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது என்று தமிமுன் அன்சாரி கூறினார். Body:திருச்சி:
தமிழக பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது என்று தமிமுன் அன்சாரி கூறினார். திருச்சியில் நடந்த தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளரிடம் கூறுகையில், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அதனால் பாஜக அரசு பிடிவாதம் பிடிக்காமல் கருப்புச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். சட்டங்களை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் இணைந்து போராடுவது ஆறுதல் அளிக்கிறது. மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இது தொடர்பாக நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன். இந்த நடப்பு கூட்டத்தொடரில் இது எடுத்துக்கொள்ளப்படும். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறும் வரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த போராட்டம் வன்முறை இன்றி நடைபெறும். அதனால் தமிழக அரசு நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இழப்பு அவர்களுக்குத்தான். கூடா நட்பு கேடாய் முடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளே ரோட்டில் வந்து உச்ச நீதிமன்றத்தை காப்பாற்றுங்கள் என்று போராடிய போதே நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. அதனால் 11 எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்பு மட்டுமின்றி, பாபர்மசூதி உள்ளிட்ட பெரும்பாலான தீர்ப்புகள் நீதி வேறு, தீர்ப்பு வேறு என்ற நிலையை உருவாக்கியுள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டிருக்கும் நிலையில் எழுச்சிமிகு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது முழுக்கைச் சட்டை. அவர்கள் கொடுத்ததோ அரைக்கைச் சட்டை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.