ETV Bharat / state

"தவிக்குதே...தவிக்குதே" - இது திருச்சி அருகே நீரின்றி தவிக்கும் ஓர் கிராமத்தின் குரல்! - water problem

திருச்சி: கருமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் இல்லாததால் தண்ணீருக்காக சாலையை கடக்கும் அவல நிலை ஏற்படுகிறது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

karumalai people strike
author img

By

Published : Aug 16, 2019, 11:31 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது கருமலை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி செயலரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கருமலையைச் சேர்ந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோர், மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி செயலர் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர மறுத்து வருகிறார் என்றும், ஏற்கனவே குடிநீருக்காக சாலையைக் கடந்து செல்லும்போது ஒருவர் உயிரிழந்துள்ளாரென்றும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Intro:ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் இல்லாததால் தண்ணீருக்காக சாலையை கடக்கும் அவலம் - பொதுமக்கள் கண்ணீர்.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி கடந்த மூன்று மாதங்களாக பலமுறை ஊராட்சி செயலரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த புத்தாநத்தம் போலீசார் மறியலை கைவிடும்படி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனால் அவர்கள் ஊராட்சி செயலர் எங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர மறுப்பதாகவும், ஏற்கனவே குடிநீருக்காக சாலையை கடந்து செல்லும்போது ஒருவர் உயிரிழந்ததாகவும்,தற்போது மீண்டும் குடிநீருக்காக சாலையை கடந்து செல்ல நேரிடுவதால் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும்,தங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வசதி இருந்தும் மின் மோட்டார்கள் இல்லாததால் தண்ணீருக்கு அல்லல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குருதி கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.