திருச்சி கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருச்சி பெரிய கடை வீதி, கிலேதார் தெருவில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் இன்றி சுமார் 2.51 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் எடுத்துச்செல்வது தெரியவந்தது. அந்த நகைகள் மங்கள் அண்ட் மங்கள் நகைக்கடைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நகைகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கரூவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:
கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு; ஊடகங்கள் மீது ஓபிஎஸ்-இபிஎஸ் பாய்ச்சல்!