திருச்சி மாவட்டம் உறையூர் கோணக்கரை பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. சில காலம் செயல்பட்ட இந்த தகன மேடை தற்போது முடங்கியுள்ளது. இது தொடர்பாக பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை மக்கள் சந்தித்து மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா காலம் என்பதால், வழக்கமான சுடுகாடுகளில் இதர காரணங்களால் இறப்பவர்களின் உடலை எரிக்க காலதாமதமாகிறது. அதனால் முடங்கியுள்ள இந்த கோணக்கரை எரிவாயு தகன மேடையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் பால முரளி தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் ரேஷன் அரசி கடத்தலைத் தடுக்க வாலிபர் சங்கம் போராட்டம்!