திருச்சி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்.05) திருச்சி அரசு மருத்துவமனை டீன் வினிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஊட்டச்சத்துகள் மிகுந்த உணவுகள், மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.