திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள தானியங்கி கிருமிநாசினி கருவியைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் லட்சுமி, மருத்துவத்துறை அலுவலர் கோபிநாத், சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் இளவரசன் இனிகோராஜ், மாற்றம் அமைப்பின் நிர்வாகி, சமூக ஆர்வலர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கோட்டை ரோட்டரி சங்கத்தின் செயலர் ராமகணேசன் வரவேற்புரை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் சேவை திட்ட இயக்குநர் நாகராஜன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... 'சென்சார் தானியங்கி கிருமி நாசினி எந்திரம்' - மாணவிகளின் அசத்தல்!