ETV Bharat / state

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை - Trichy Divisional Manager warns

Southern railway Trichy: ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்டப் பொருட்களை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 10:56 PM IST

திருச்சி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ரயில்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மற்றும் பட்டாசுப் பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று (நவ.10) காலை 6 மணிக்கு புறப்பட்ட 'வந்தே பாரத்' அதிவேக விரைவு ரயில் (vande bharat express chennai to tirunelveli) காலை 9.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடையை வந்தடைந்தது.

அப்போது, இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணத்தின் போது பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், 'ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடியப் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது' என அறிவுறுத்தினர்‌.

படியில் தொங்கிக்கொண்டோ, படியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே கேட் போட்டப் பின்னர், தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில் வரும்போது தண்டவாங்களை கடந்து செல்வது போன்றவற்றை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலாவது நடைமேடையில் நாடகம் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தீபாவளி உள்பட பண்டிகை காலங்களில் ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய ஹீட்டர்ஸ், கேஸ் சிலிண்டர், பட்டாசு, தீ பெட்டி கொண்டு செல்லக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும்.

திருச்சி கோட்டத்தில் ரயிலில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றது தொடர்பாக 2 வழக்குகளும், லெவல் கிராசிங் தொடர்பாக 20 வழக்குகளும், ரயில் பெட்டியில் புகை பிடித்தது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளி பட்டாசு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.