ETV Bharat / state

திருச்சி சமயபுரம் சித்திரை திருவிழா நிறைவு - திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்சி சமயபுரம் சித்திரை திருவிழா நிறைவு

author img

By

Published : Apr 27, 2022, 10:37 AM IST

Updated : Apr 27, 2022, 2:10 PM IST

திருச்சி: தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி கடந்த 19 ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் தேர் முடிந்து 8 ம் நாள் திருவிழாவும், சித்திரை திருவிழாவின் நிறைவு விழா நேற்று இரவு அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் புறப்பட்டு சென்று திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவு மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்டு தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு தேரோடும் வீதிகளில் வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் சமயபுரம் தேங்காய் பழ வியாபாரிகள், புஷ்ப வியாபாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், கோயில் பணியாளர்கள், மற்றும் கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.

இதையும் படிங்க:சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம்!

Last Updated : Apr 27, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.