திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 858ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் முன்னதாக 808 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 152 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை எட்டாயிரத்து 899 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142ஆக உள்ளது. தற்போது 817 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.