ETV Bharat / state

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கரையேறுமா, தரை தட்டுமா காங்கிரஸ் - தேர்தல் விவரங்கள்

திருச்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐந்து இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை விவரிக்கும் தொகுப்பு தான் இது...

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Feb 9, 2022, 11:02 PM IST

Updated : Feb 21, 2022, 7:39 PM IST

திருச்சி: மாநகராட்சியிலுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணியில் போராடி, ஐந்து இடங்களை காங்கிரஸ் பெற்றிருக்கிறது.

காங்கிரஸ், முதலில் கோட்டத்திற்கு ஒன்று எனச்சொல்லி 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கியது, திமுக. ஆனாலும் விடாது கருப்பு என காங்கிரஸ் கூடுதலாக ஒன்றைப் பெற்றது. கோஷ்டிகள் இல்லாத காங்கிரஸா.... திருச்சியிலும் இருக்கு கோஷ்டி.

வேட்பாளர்கள் ஐவரைப்பற்றி ஒரு அலசல்

2ஆவது வார்டில் ஜவஹர், முன்னாள் எம்.பி., அடைக்கலராஜின் ஆதரவாளராக அறியப்பட்டவர். அவருடைய மகன் ஜோசப் லூயிஸின் முயற்சியால், ஜவஹருக்கு இந்த சீட்டு கிடைத்திருக்கிறது.

முன்னதாக, ஜவஹர், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார்.

24ஆவது வார்டில் விமலாராணி சோபியா நிற்கிறார். திருநாவுக்கரசர் ஆதரவாளர். இவரது கணவர் பேட்ரிக் ராஜ்குமாரின் இடத்தை இவர் நிரப்பி இருக்கிறார் என்கிறார்கள்.

31ஆவது வார்டில் முன்னாள் மேயர் சுஜாதா நிற்கிறார். ப.சிதம்பரத்தின் அன்பைப் பெற்றவர் என்பதாலும் மக்களிடம் அறிமுகமானவர் என்பதாலும் இவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

39ஆவது வார்டில் ரெக்ஸ் நிற்கிறார்; இவர் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பி.ஏ என்பது கூடுதல் தகவல்.

41ஆவது வார்டில் கோவிந்தராஜ் நிற்கிறார்; திருநாவுக்கரசருக்கு வேண்டப்பட்டவர்.

காங்கிரஸில் சீட் கிடைக்காததால் முன்னாள் கவுன்சிலர் ஹேமா சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறார்.

இவர் 53ஆவது வார்டில் போட்டியிடுகிறார். ஆகமொத்தம் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க: மக்களவையில் மத்திய அமைச்சருக்கும் திமுக எம்.பி.க்கும் வாக்குவாதம்

Last Updated : Feb 21, 2022, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.