ETV Bharat / state

காணாமல் போன 241 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீஸ்! - திருச்சி மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்களை மீட்ட போலீசார், அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தங்களது உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அறிவுறுத்தினார்.

Trichy
திருச்சி
author img

By

Published : May 26, 2023, 7:34 PM IST

திருச்சி: மாநகரப் பகுதிகளில் செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் பொதுமக்களுக்கு தெரியாமலேயே செல்போன்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. சில நேரங்களில் பொதும்மக்கள் தங்களது கவனக் குறைவால் செல்போல்களைத் தவறவிடுகின்றனர். இதுபோல செல்போன்கள் தொலைந்து போனால், மக்கள் போலீசாரிடம் புகார் கொடுக்கிறார்கள். ஆனால், ஒன்றிரண்டு செல்போன்கள் மட்டுமே திரும்பக் கிடைக்கும்.

இந்த நிலையில், திருச்சி மாநகரில் செல்போன்கள் தொலைந்து போல புகார்களை சைபர் கிரைம்‌ போலீஸ் உதவியுடன் திருச்சி மாநகர போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மாயமான செல்போன்களின் ஐஎம்இஐ(IMEI) நம்பரைக் கொண்டு போலீசார் விரைந்து செயல்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், நடப்பாண்டில் காணாமல் போன 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று(மே.26) திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்யபிரியா, "திருச்சி மாநகர் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்ட, காணாமல் போன, திருடப்பட்ட 241 செல்போன்கள் அதன் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செல்போன்களை இன்று உரிய நபர்களிடம் ஒப்படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பொது மக்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடமைகளை பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் செல்போன்களை மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். திருச்சி மாநகர காவல்துறை தொடர்ந்து குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை தவறவிட்ட உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா ஒப்படைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த காவல் ஆணையர் சத்யபிரியா, "செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக 500 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் அனைத்து வழக்குகளும் முடிக்கப்படும். சாலையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளச் சந்தையில் போலி மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டுமே 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா, துணை ஆணையர்கள் அன்பு மற்றும் சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டிராலி பேக்கில் ஓட்டல் அதிபர் உடல்.. கேரள காதல் ஜோடி சென்னையில் கைது.. பகீர் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.