ETV Bharat / state

திருச்சியில் 7 கண்காணிப்பு கோபுரங்கள்; 186 சிசிடிவி கேமராக்கள்.. தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்! - 186 கண்காணிப்பு கேமராக்கள்

Trichy Police: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாட்டு நிலையத்தை மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.

கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி காவல்துறை நடவடிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 8:43 PM IST

கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி காவல்துறை நடவடிக்கை

திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலைக்கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் அதிகாரிகளை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக குற்றசம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் முன்னேற்பாடுகளாக, 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டை விட கூடுதலாக 50 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு, 186 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11 மணிக்கு மேல் அப்பணிகளை செய்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

தற்காலிக காவல் உதவி மையம்: பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றி புகார் கொடுக்கவும், NSB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரங்கள் (Watch towers): NSB ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, மலைகோட்டை வாசல், மெயின்கார்டு கேட், நந்திகோயில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன், பெரியகடைவீதி மற்றும் சின்ன கடைவீதி ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு, பைனாகுலர் (Binocular) மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், NSB ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, W.B ரோடு, NSB ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 186 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றை கண்காணிக்க NSB ரோடு பகுதியில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு பணிகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் விபரம்:

சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு: கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில், பண்டிகை கால பாதுகாப்பு பணிக்காக 1 காவல் உதவி ஆணையர், 4 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 48 காவல் ஆளிநர்களும் மற்றும் 30 ஊர்க்காவல் படையினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பு: அதேபோல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில், 1 காவல் ஆய்வாளர், 4 சார்பு ஆய்வாளர்கள், 20 காவல் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகன நிறுத்துமிடங்கள்: இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம், அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே நிலையம் பார்க்கிங் மைதானம் போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையரின் கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக மொத்தம் 115 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சையில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.