திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ தொறிற்சங்கம் சார்பில், அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு அரசால் தற்கொலைக்குத் தூண்டப்படும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நவமணி தலைமை வகித்தார். மேலும் திருச்சி புறநகர் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சம்பத், மணப்பாறை ஆட்டோ சங்க கிளைச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வன்னியர் சங்க துணைத் தலைவர்: போலீசார் தடுத்து நிறுத்தம்!