ETV Bharat / state

56 முறை ரத்ததானம்: காவலருக்கு கொடைவள்ளல் விருது - திருச்சி ஆயுதப்படை காவலர்

திருச்சி: 56 முறை ரத்த தானம் வழங்கிய ஆயுதப்படை காவலருக்கு ரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கப்பட்டது.

ரத்தக் கொடை வள்ளல் விருது
ரத்தக் கொடை வள்ளல் விருது
author img

By

Published : Aug 28, 2020, 2:37 PM IST

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு 4 முறை என 56 முறை தொடர்ந்து ரத்த தானம் செய்துள்ளார்.

மேலும், இவர் கடந்த 4 வருடமாக ரத்ததான தன்னார்வலர்களை ஒன்றிணைத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்த தானம் செய்து வருகிறார். இவர் செய்து வரும் சமூக சேவையை பாராட்டும் விதமாக 'தேசம் காப்போம்' அறக்கட்டளை சார்பில் தொடர் ரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளி முதல்வர் ஏடிஎஸ்பி முத்துக்கருப்பன், டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளர் சலீம்-ஜாவித் ஆகியோர் கவாத்து மைதானத்தில் பயிற்சி காவலர்கள் முன்பு காவலர் அரவிந்துக்கு விருது வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.