மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த வினோத் குமார், சரவணகுமார், ஜபருல்லா ஆகியோர் தங்களது பேண்ட் பாக்கெட்டில் 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.21 லட்சமாகும். தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.