வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கசாமி என்ற பயணி கொண்டு வந்த சோப்பு பொட்டலங்களை அலுவலர்கள் பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் 8 தங்க செயின்களை சோப்புக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் ரங்கசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 738 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 38 லட்சம் ரூபாயாகும்.
இதையும் படிங்க: சென்னை - கொல்கத்தா விமான சேவை தொடக்கம்: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு