திருச்சி மாநகரில் பாலக்கரை ரவுண்டானா முதல் மரக்கடை வரையிலான மாநகராட்சி சாலையின் இரு புறங்களிலும் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அலுவலர்கள் காவல் துறையினரின் துணையுடன் அகற்றி வருகின்றனர்.
அப்போது ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கடை உரிமையாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளுவிற்கு வித்திட்டது. அப்போது மாநகராட்சி உதவி ஆணையர் அக்பர் அலியை வியாபாரிகள் தள்ளிவிட்டனர்.
மேலும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அதிகரிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஒருபக்கம் ஆக்கிரமிப்பு, மறுப்பக்கம் கழிவுநீர்; நெடுங்குன்றம் மக்களில் அவலநிலை!