ஊரடங்கின் காரணமாக அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன. மேலும், டீக்கடை, பெட்டிக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், போதைப்பொருள்களுக்கு அடிமையானர்வர்கள் தள்ளாடிவருகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி சிலர் ஆங்காங்கே கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இவர்களைக் கண்டறிந்து பிடிப்பது காவல் துறையினருக்குச் சவாலாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் திருச்சி உறையூரில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் வசித்துவரும் சிவக்குமார் என்பவர் குட்கா, பான் உள்ளிட்ட போதைப்பொருள்களை வீட்டில் வைத்து கள்ளத்தனமாக விற்றுவருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் உறையூர் காவல் ஆய்வாளர் மணிராஜ், உதவி ஆய்வாளர் அலாவுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சிவக்குமார் போதைப்பொருள்கள் விற்பதை உறுதிசெய்த காவல் துறையினர், அவரைக் கைதுசெய்து அவரிடமிருந்த போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: வாகன தணிக்கையில் சிக்கிய 200 மது பாட்டில்கள்